‘’அந்த நாள் ரொம்ப மோசம் ’’ - ரவி சாஸ்திரி வருத்தம்

coach ravishastri teamindia
By Irumporai Dec 08, 2021 08:02 AM GMT
Report

அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னுக்கு சுருண்டது, எனது பயிற்சி காலத்தின் மோசமான தினமாக அமைந்தது,'' என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59.

இவரது பயிற்சியில் கடந்த 2020-21 ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 2-1 என கோப்பை வென்றது. இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59. இவரது பயிற்சியில் கடந்த 2020-21 ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 2-1 என கோப்பை வென்றது.

இருப்பினும் அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியா 244, ஆஸ்திரேலியா 194 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 9/1 என என இருந்தது. மூன்றாவது நாளில் இந்தியா அதிக ரன் எடுத்து ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்டது.

மாறாக 36 ரன்னுக்கு சுருண்டது. இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியது: அடிலெய்டு டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் கைவசம் 9 விக்கெட் இருந்தன. ஆனால் கடைசியில் 36 ரன்னுக்கு சுருண்டோம். நாங்கள் அனைவரும் பேச வார்த்தையின்றி உணர்ச்சியில்லாமல் போய்விட்டோம்.

இது எப்படி நடந்தது என நாள் முழுவதும் அதிர்ச்சியில் இருந்தோம். இதற்கு பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் நான் இருந்தேன். வேறு வழியே இல்லை. ஏனெனில் அதுதான் பயிற்சியாளர் பணி. தப்பிப்பதற்கு எப்படியும் வழிகள் இருக்காது எனத் தெரியும்.

ஏனெனில் எங்கும் ஓடி ஒளிய முடியாது. உண்மையில் 36 ரன்னுக்கு ஆல் அவுட்டானது தான் எனது பயிற்சியாளர் வாழ்க்கையில் மோசமான நாள். அடுத்து என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துமாறு வீரர்களிடம் தெரிவித்தேன். 36 ரன்னுக்கு அவுட்டான ஒருமாதம் கழித்து கடைசியில் நாங்கள் தொடரை வென்றுவிட்டோம்.

இது எப்படி நடந்தது என இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனது வாழ்க்கை உள்ள வரை மக்கள் இந்த தொடர் வெற்றி குறித்து தான் பேசுவர் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.