தேசிய பங்குச் சந்தை முன்னாள் தலைவர் கைது - போலீஸ் வளையத்தில் சிக்கும் பிரமுகர்கள்?

By Nandhini Sep 07, 2022 06:51 AM GMT
Report

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைவர் ரவி நரேனை அமலாக்க இயக்குனரகம் கைது செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

ரவி நரைன்

1994ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டவர்தான் ரவி நரைன். இதனையடுத்து, தேசிய பங்குச்சந்தை நிர்வாக குழுவின் துணை தலைவராகவும் 2017ம் ஆண்டு வரை செயல்பட்டார்.

இதன் பிறகு, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் ரவி நரைன். இந்நிலையில், வங்கி ஊழியர்களின் தொலைப்பேசிகளைச் சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாகக் கூறப்படும் வழக்கில் தற்போது ரவி நரேனை அமலாக்க இயக்குனரகம் (ED) நேற்று இரவு கைது செய்துள்ளது.

தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பண மோசடி முறைகேடு தொடர்பாகவும் ரவி நரைனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பண மோசடி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்கத்துறையினர் ஏற்கெனவே கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ravi-narain-arrest

ED அதிகாரிகளின் வளையத்தில் சிக்கப்போகும் பிரமுகர்கள்?

நரேன் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மோசடி வழக்கில், டெல்லியைச் சேர்ந்த iSEC சர்வீசஸ் பிரைவேட் லிமிடெடின் அப்போதைய அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களான சந்தோஷ் பாண்டே, ஆனந்த் நாராயண், அர்மான் பாண்டே, மணீஷ் மிட்டல், நமன் சதுர்வேதி ஆகியோர் மீதும் விசாரணை நிறுவனம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இவ்வழக்கில் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே, NSE இன் முன்னாள் தலைவர்கள் ரவி நரேன், சித்ரா ராமகிருஷ்ணா, ரவி வாரணாசி மகேஷ் ஹல்திபூர் மற்றும் தெரியாத பலர் மீதும் வழக்கு தொடப்பட்டு முதற்கட்ட விசாரணை மும்முரமாக அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.