ஆன்மீகத்தில் இறங்கிய ரவி மோகன்... அதிரடி முடிவிற்கு காரணம் என்ன?
நடிகர் ரவி மோகன் வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஆன்மீகத்தில் இறங்கியுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் ரவி மோகன். இவரது மனைவி ஆர்த்தி மற்றும் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் இவர்களது வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்ட நிலையில், தற்போது விவாகரத்து வழக்கு சென்று கொண்டிருக்கின்றது.
இதற்கிடையே ரவி மோகனுக்கு தெரபி மருத்துவராக அறிமுகமானவர் தான் பாடகி கெனிஷா. இருவரும் பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்று வந்தனர்.

தற்போது கெனிஷா குறித்து அவதூறாக பேசப்பட்டுவதாக கூறிய நிலையில், கெனிஷா சென்னையை விட்டு செல்வதாக கூறினார். பின்பு ரவி மோகன் பத்திரிக்கையாளர் கூடுகை நடத்திய நிலையில், வீட்டில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் கூறினார்.
மேலும் தனது வாழ்க்கை பிரச்சனை முடிவிற்கு வரும்வரை சினிமாவில் நடிப்பதில்லை என கூறியுள்ளார். தற்போது யாரும் எதிர்பாராத நிலையில் ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார்.
சபரிமலைக்கு மாலை போட்டுள்ள நிலையில் 41 நாட்கள் விரதம் இருப்பதாகவும், மொபைல் போன் பயன்படுத்தமாட்டேன் என்றும் கூறியுள்ளார். ரவிமோகனின் இந்த மாற்றத்தினைக் கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.