ரவீ உன்னோட மாஸ்டர் பிளான் எனக்கு தெரியும்…என் கிட்ட வச்சுக்காத - வனிதா

Tamil Cinema Vanitha Vijaykumar
By Thahir 2 வாரங்கள் முன்

ரவீந்தரின் மாஸ்டர் பிளான எனக்கு தெரியும், என் கிட்ட வச்சுக்காத என நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம் 

அண்மையில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பதிவுகள் தான் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்து இருந்தது.

ரவீ உன்னோட மாஸ்டர் பிளான் எனக்கு தெரியும்…என் கிட்ட வச்சுக்காத - வனிதா | Ravi I Know Your Master Plan Vanita

சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி அனில் என்பவரை திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் முதல் திருமணம் ஆன நிலையில் அவரும் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்தார். இதையடுத்து சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை ரவீந்தர் காதலித்து திருமணம் செய்து கொண்டர். இத்திருமணம் இவர்களுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலான சமயத்தில் மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பிசியாகவும் இருக்கிறேன்.

அட்வைஸ் கொடுத்த வனிதா 

கர்மா ஒரு பிட்ச்… அவளுக்கு திருப்பி கொடுக்க தெரியும். நான் அவளை முழுமையான நம்புகிறேன் என ட்வீட் செய்திருந்தார் வனிதா விஜயகுமார். ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதால் தான் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் என விமர்சனங்கள் கிளம்பியது.

வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்த போது அதை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் ரவீந்தர். இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வனிதா விஜயகுமாரிடம் ட்விட்டர் பதிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ரவீ உன்னோட மாஸ்டர் பிளான் எனக்கு தெரியும்…என் கிட்ட வச்சுக்காத - வனிதா | Ravi I Know Your Master Plan Vanita

அதற்கு பதில் அளித்த நான் கர்மாவை முழுமையாக நம்புகிறவள். மொத்தமாக நான்கைந்து விஷயங்கள் என் வாழ்க்கையில் கர்மாவால் அந்த சமயம் நடந்தது. 40 வயதுக்கு மேல் தான் வாழ்க்கை நமக்கு திரும்ப கிடைக்கும் கொடுக்கும், அப்படித்தான் எனக்கும் நடக்கிறது.

அந்த ட்வீட்டர் பதிவு ரவீந்தர் பற்றியல்ல என்றும் சொல்லிவிட முடியாது. மொத்தமாக நான்கைந்து விஷயங்களின் வெளிப்பாடு தான் அது.எதுக்கு இவுங்க எல்லார் கேள்விக்கும் பதில் சொல்லிட்டு இருக்காங்க.

பேசுறவங்க பேசிகிட்டு தான் இருப்பாங்க. சோஷியல் மீடியாவுல கமெண்ட் செக்ஷனை ஆப் பண்ணி வச்சிட்டு போய் வேலையை பாக்க வேண்டியது தானே என அறிவுரையும் வழங்கினார். மேலும் ரவி உன் மாஸ்டர் பிளான் என்னன்னு எனக்கு தெரியும். என் கிட்ட வச்சுக்காத என்றும் தெரிவித்தார்.