அறிமுகப்போட்டியிலேயே சாதனைப் படைத்த ரவி பிஷ்னோய் - என்ன தெரியுமா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி வீரர் ரவி பிஷ்னோய் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்தியா வென்றது.
இதனைத் தொடர்ந்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட இந்திய அணி வீரர் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
குறிப்பாக ரோஸ்டன் சேஸ் மற்றும் ரோமன் பவல் ஆகியோருடைய விக்கெட்டுகளை ரவி பிஷ்னோய் அடுத்தடுத்து கைப்பற்றி அசத்தினார். போட்டியின் தொடக்கத்தில் அவர் நிக்கோலஸ் பூரன் அடித்த பந்தை கேட்ச் செய்தார். ஆனால் ரவி பிஷ்னோய் பவுண்டரி லைனை மிதித்ததால் சிக்சர் வழங்கப்பட்டது.
இதனால் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்துவீசியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் அறிமுகப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினைப் பெற்ற 9வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்னதாக தினேஷ் கார்த்திக், சுப்ரமணியம் பத்ரிநாத், பிரக்யான் ஓஜா, பிரக்யான் ஓஜா, பரிந்தர் சரன், நவ்தீப் சைனி, நவ்தீப் சைனி, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.