விஷால் என்னை அப்படித்தான் அழைப்பார்; அவர் என்னை.. மனம் திறந்த நடிகை ரவீனா
நடிகர் விஷால் குறித்து ரவீனா சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார்.
நடிகை ரவீனா
யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரவீனா. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் உதயநிதி, ஃபகத் பாசில் நடித்த மாமன்னன்.
இதில், ரவீனா ரவிக்கு ஒரு டயலாக் கூட இல்லை. ஆனால் ஃபஹத் மற்றும் ரவீனா ரவி இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதன்மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே பிடித்துவிட்டார்.
சுவாரஸ்ய தகவல்
தொடர்ந்து, நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தில் டப்பிங் கலைஞர் ரவீணா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர்,
"வீரமே வாகை படப்பிடிப்பின் போது விஷால் என்னை பரதேசி என அழைப்பார். ஏன் அப்படி அழைத்தார் என தெரியவில்லை. ஆனால் அவர் என் மீது அதிக அக்கறை காட்டுவார்.
விஷால் என் மூஞ்சில் சேற்றை பூசுவது போல் விளையாடுவார். ஆனால் அவரைப் போன்ற ஒருவரை இது வரை என்னால் பார்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
