ரவீனாவுக்கு ரெட் கார்டு? இனி 1 வருடத்திற்கு டிவியில் வர முடியாது
நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு தரப்பட்டுள்ளது.
நடிகை ரவீனா
பிக் பாஸ் தமிழ் சீசன் 7வது நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானவர் ரவீனா. சின்னத்திரையில் 7சி சீரியல் மூலம் அறிமுகமாகி, கதாநாயகியாக மௌன ராகம் சீரியலில் நடித்திருந்தார்.
தொடர்ந்து விஜய் டிவியில் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் என்ற சீரியல்னில் கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார். அந்த சீரியலுக்கான ப்ரோமோவும் வெளியாகி இருந்தது. அதன்பின் சில வாரங்களிலேயே ரவீனா அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார்.
ரெட் கார்டு
அவருக்கு பதிலாக நடிகை ஆர்த்தி சுபாஷ் அந்த கேரக்டரில் நடிக்க சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆனால் ரவீனா சீரியலில் இருந்து திடீரென விலகியதால் அந்த சீரியலின் தயாரிப்பாளர்கள் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ரவீனாவுக்கு ரெட் கார்டு எனச் சில மாதங்களுக்கு முன் அறிவித்ததாக தகவல் வெளியாகியது. ஆனால் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரவீனா, என் மீது கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் எனக்கு ரெட் கார்ட் எல்லாம் தரப்படவில்லை. அதுபோல கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்ட போது பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமாக முடிஞ்சிடுச்சு.
அதனால் நான் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொடர்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதுபோல சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகியதற்கு என்னுடைய பர்சனல் காரணம்தான் வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.