Rava Cake: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ரவையில் கேக்

Healthy Food Recipes
By Sakthi Raj Feb 01, 2026 09:48 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

in உணவு
Report

வீடுகளில் ரவை என்பது எப்பொழுதும் இருக்கக்கூடிய ஒரு பொருளாகவே இருக்கிறது. மிகவும் எளிதாக ரவை வைத்து நாம் உணவுகளை செய்துவிடலாம். அதேபோல்தான் ரவையில் குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான கேக்குகள் மிக எளிதாகவும் சாஃப்டான முறையிலும் செய்யலாம். 

Rava Cake: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ரவையில் கேக் | Rava Cake Easy And Healthy Recipe Preparation

உடல் எடையை குறைக்க உதவும் 5 உணவுகள்

உடல் எடையை குறைக்க உதவும் 5 உணவுகள்

 ரவை கேக் செய்வதற்கான தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

தயிர் - 3/4 கப்

நெய் - 3/4 கப்

பொடித்த சர்க்கரை - 3/4 கப்

பால் - 1/2 கப்

வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி

சுத்திகரிக்கப்பட்ட மாவு - 1 தேக்கரண்டி

துத்தி பழம் - தேவைக்கேற்ப

சர்க்கரை பாகு - 2 முதல் 3 தேக்கரண்டி

முந்திரி மற்றும் பாதாம் - தேவைக்கேற்ப நறுக்கியது

Rava Cake: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ரவையில் கேக் | Rava Cake Easy And Healthy Recipe Preparation

செய்முறை:

ரவை கேக் செய்வதற்கு முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை நெய், தயிர், சேர்த்து நன்கு கலக்கி அதில் ரவை மற்றும் பால் சேர்த்து கிளற வேண்டும். அதை 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும்.

இது ரவை கலவையை கெட்டியாகவும் உப்பி வரவும் உதவும். பிறகு பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் சிறிது பால் போன்ற மீதமுள்ள பொருட்களை இந்த கலவியுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

பிறகு ஓவனை ஓவனை 180 டிகிரியில் 10 நிமிடங்கள் முன்னதாகவே சூடாக்கி கொள்ள வேண்டும். பிறகு இந்த கேக் செய்யும் பாத்திரத்தில் லேசாக நெய் தடவி அதன் மீது சிறிது மாவு தூவி வைத்துக்கொள்ள வேண்டும்.

கெட்ட கொழுப்பை அடியோடு விரட்டும் காய் எது தெரியுமா?

கெட்ட கொழுப்பை அடியோடு விரட்டும் காய் எது தெரியுமா?

இது கேக் தயாரித்த பிறகு பாத்திரத்தில் இருந்து எடுப்பதற்கு எளிதாக்கும். இந்த பாத்திரத்தில் ரவை மாவை ஊற்றவும். அதன் மேல் உலர் பழங்கள் மற்றும் டூட்டி ஃப்ருட்டியை தூவி ஓவனில் வைத்து விட வேண்டும். ஓவனை 180 டிகிரி செல்சியஸில் வைக்கவும். 

பிறகு அதை 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட வேண்டும். இடையில் நீங்கள் அதை சரி பார்த்துக் கொள்ளலாம். கேக் பஞ்சு போல் காட்சி அளிக்கும் போது அதை ஓவனில் இருந்து எடுத்து விட வேண்டும். சிறிது குளிர்ந்ததும் கேக் மேலே சாக்லேட் அல்லது சர்க்கரை சிறிது சேர்த்து பரிமாறலாம்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் எளிமையான இந்த கேக் வீடுகளில் நம் எளிய முறையில் செய்து சாப்பிட்டு மகிழலாம்.