தமிழகத்தில் நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

tnrationshoptimechange rationshoptnchanges
By Swetha Subash Mar 01, 2022 10:51 AM GMT
Report

நியாயவிலை கடைகள் செயல்படும் வேலை நேரத்தில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு | Ration Shops In Tn Undergoes Changes In Timings

அதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8:30 - 12:30 மணி வரையும், பிற்பகல் 3 - 7 மணி வரையிலும்,

இதர பகுதிகளில் காலை 9 - 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி - 6 மணி வரையும் ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் அனைத்து நியாயவிலை கடைகளிலும் ரேஷன் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம்,

தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.