ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட் - கூட்டுறவு துறை அதிரடி
ரேசன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் கூட்டுறவு துறை அதிரடி அறிவிப்பு.
அரசு அறிவித்த ரேசன் கடை பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும் என்றும்,
பழுதடைந்து உள்ள விற்பனை முனைய எந்திரங்களை உடனுக்குடன் வட்ட பொறியாளர்களே சரி செய்து தர வேண்டும்,
பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் நாளை மறு நாள் முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடிக்கப்படும் என கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் அனைத்து நாட்களுக்கும் சம்பளம் பிடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.