ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு ஏன் குறைப்பு ? - விளக்கம் கொடுத்த அமைச்சர்
தமிழ் நாட்டில் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி விளக்கம் கொடுத்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் மண்ணெண்ணெய் விநியோகம் குறைந்துள்ளதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.இதுதொடர்பாக 2 முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாக புகார் கூறினார்.
[
எரிவாயு இணைப்பு அதிகம்
எரிவாயு இணைப்பு அதிகம் உள்ள மாநிலம் என்பதால், தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை விநியோகம் குறைக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியிருப்பதாகவும், இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து மத்திய அமைச்சரை சந்தித்து முறையிடும் திட்டம் உள்ளதாகவும் சக்கரபாணி கூறினார்.