ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம் - இனி இதெல்லாம் கிடைக்கும்..!
ரேஷன் கடைகளில் மத்திய அரசு வழங்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்க முடிவு செய்தது.
இதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 81.3 கோடி மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.
நியாய விலை கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் சென்று, இத்திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா காரணமாக 2020ல் பிரதமரின் "கரீம் கல்யாண் அன்ன யோஜனா" திட்டம் மூலம் மக்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த திட்டம் இத்துடன் முடிவுக்கு வர உள்ளதாக கூறியுள்ளனர். மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் பற்றி, மத்திய உணவுத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாநில உணவுத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
நியாயவிலை கடையில் சரியான முறையில் அனைவருக்கும் உணவு தானியங்கள் சென்றடைகிறதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மத்திய அரசு தரப்பில் மாநில அரசுக்கு இத்திட்டத்தின் கீழ் சரியான முறையில் அனைவருக்கும் உணவு பொருள் வழங்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இன்று முதல் ஒரு வருட காலம் இலவசமாக 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.