6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம்

By Fathima Sep 30, 2026 05:56 AM GMT
Report

ஆறு மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை முதல் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தகுதியான மற்றும் ஏழை குடும்பங்களுக்கு மத்திய அரசு வழங்கும் இலவச உணவு தானியங்கள், மாநில அரசுகளின் பொது வினியோகத் திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுகிறது.

ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விபரங்கள் தொடர்ந்து சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது 6 மாதங்களுக்கு மேலாக ரேஷன் பொருட்கள் பெறாத ரேஷன் கார்டுகளை முடக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகள் நாளை முதல் தற்காலிகமாக முடக்கப்படும்.

அவர்கள் தங்களது தகுதியை உறுதி செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும், அப்போது e Kyc முடித்தால் மீண்டும் உணவு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.