குடும்ப அட்டை 15 நாட்களில் வழங்கப்படும் - அமைச்சர் திட்டவட்டம்

Minister Card Explain Ration
By Thahir Dec 05, 2021 06:42 PM GMT
Report

குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

திருவாரூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு இரண்டு கோடி ரூபாய் மதிப்பில்,

ஊனமுற்றோருக்கு பேட்டரியால் நகரும் நாற்காலி, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை,

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 17 நபர்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கானகிரீட் வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி குறுவை நெல்லுக்கான ஆதார விலையை 1960 என்பதை 2060 ஆக 12 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றி இருப்பதாக கூறினார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் மூன்று லட்சம் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும் விரைவில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 800 மெட்ரிக் டன் நெல் அறைக்கின்ற வகையில்

தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் அரிசி ஆலை நிறுவப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தால் 15 தினங்களுக்குள் வழங்கப்படும் எனவும் அந்த வகையில் இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரம் நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.