புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? உங்களுக்கு முக்கிய அறிவிப்பு

Government of Tamil Nadu
By Thahir Apr 07, 2023 02:52 AM GMT
Report

ஆன்லைனில் விண்ணப்பித்தால் புதிய ரேஷன் கார்டு வீடு தேடி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் குடும்ப அட்டை

முந்திய காலகட்டத்தில் ரேஷன் கார்டு வாங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், இப்போதைய இருக்கும் காலகட்டத்தில் மக்களுக்கு எளிதாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் கணினி மையம் வாயிலாக ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய குடும்ப அட்டைகளை தபால் மூலமாக பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

குடும்ப அட்டை தொலைந்து போனாலோ அல்லது திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலோ இணையத்தில் விண்ணப்பித்து, அட்டையை பெற வட்ட வழங்கல் அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது.

Ration card for home search

இந்நிலையில், எளிமைப்படுத்தும் வகையில், இணையம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய அட்டைகளை வீட்டிற்கே தபால் மூலமாக பெறும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

வீடு தேடி வரும் இனி

தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் பேசிய அமைச்சர் ஆர்.சக்கரபாணி ” ஆன்லைனில் விண்ணப்பித்தால் புதிய ரேஷன் கார்டு வீடு தேடி வரும். ரேஷன் கார்டு பெறுவதற்காக நேரில் செல்ல வேண்டாம், தபாலில் புதிய ரேஷன் கார்டு அனுப்பப்படும்” என அறிவித்துள்ளார்.