நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி தொடங்கியது

2000 rationkadai thamilagam
By Arun Raj May 15, 2021 05:29 AM GMT
Report

தமிழகத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கும் பணி தொடங்கியது


நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி தொடங்கியது | Ration 2000 Niyavilaikadai 

திண்டுக்கல் அருகே உள்ள  பிள்ளையார் நத்தம் கிராமத்தில் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.


திண்டுக்கல் அடுத்துள்ள பிள்ளையார் நத்தத்தில் தமிழக அரசின் சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ 2000 வழங்கும் நிகழ்ச்சி இன்று 1505.21 நடைபெற்றது இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்துகொண்டார் அப்பொழுது திடீரென மழை பெய்தது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 2000 முதல் தவணையாக வழங்கினார்