சித்தார்த் விவகாரம் - அப்படியா ...நான் பார்க்கல...ராதிகா சரத்குமார்
சித்தார்த் நிகழ்ச்சியில் சலசலப்பு தமிழகம் கர்நாடகம் காவிரி நதிநீர் பிரச்சனை தற்போது மீண்டும் பெரிய மோதல்களை பெற்று வருகின்றது.
சித்தார்த் விவகாரம்
காவிரி மேலாண்மை ஒழுங்காற்று வாரியத்தின் அறிவுறுத்தலை ஏற்று கர்நாடக அரசு ஒருசொட்டு தண்ணீரை கூட திறக்கக்கூடாது என கன்னட அமைப்புகள் மாநிலம் முழுவதும் பந்த் அறிவித்து நடத்தினர். அதற்கு மத்தியில் நேற்று நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான "சித்தா" படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த கன்னட அமைப்புகளை சேர்ந்த பலர் திடீரென நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து பெரும் இடஞ்சல்களை அளித்தனர். ராதிகா பதில் இதன் காரணமாக அங்கு பெரும் சலசலப்புகள் ஏற்பட நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் டென்ஷன் ஆன சித்தார்த் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது.
ராதிகா பதில்
இந்த சூழலில் நடிகர் சித்தார்த்துக்கு பலரும் ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதிகா சரத்குமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், ‛நான் பார்க்கவில்லை'' என்றார்.
மீண்டும் சித்தார்த்துக்கு தமிழ்நாட்டில் இருந்து நடிகர், நடிகைகள் யாரும் எந்தவித ஆதரவும் கொடுக்கவில்லை'' என கேள்வி எழுப்பிய போது, ‛‛அப்படியா.. எனக்கு கடந்த 3 நாட்களாக உடல்நலம் சரியில்லை - அதோடு விளம்பரம் தொடர்பான பணியில் பிஸியாக இருந்தேன் - ஏதோ கேள்விபட்டேன் சித்தார்த் பற்றி - சித்தார்த் பொறுமையாக உட்கார்ந்து கொண்டிருந்தார்'' என்றார்.