ரதயாத்திரைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

india tamilnadu Madurai
By Jon Feb 20, 2021 06:14 AM GMT
Report

மதுரையில் ரத யாத்திரையை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த செல்வகுமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி தர ஆணையிட்டுள்ளது.

ராமர் கோயில் கட்ட பொருள் உதவி பெறும் வகையில் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் 100 வார்டுகளில் ரத யாத்திரை வாகனத்தை ஒலிபெருக்கியுடன் இயக்க அனுமதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.