ராட்சசன் ஆசிரியர் பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு- இயக்குநர் ராம்குமார்

ratchasan psbschool
By Irumporai May 25, 2021 11:56 AM GMT
Report

ராட்சசன் படத்தில் இடம்பெற்ற இன்பராஜ் கதாபாத்திரம், பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இயக்குநர் ராம்குமார் கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்பொழுது பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் வீடியோ கால்கள் வழியே நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் . மாணவிகளுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்கும்போது மேலாடை இன்றி வெறும் துண்டுடன் தோன்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளானது.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில், உருவான ராட்சசன் திரைப்படத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இன்பராஜ், எனும் கதாபாத்திரம் ராஜகோபாலனோடு இணைத்து பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போதைய சம்பவம் குறித்து  இயக்குனர் ராம்குமார், தனது ட்வீட்டர் பதிவில் :

இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கப்படவில்லை என்றும், பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு தான் இன்பராஜ் கதாபாத்திரம் என்றும் விளக்கமளித்துள்ளார்.

மேலும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடைபெற்றுள்ள சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்கள் இன்பராஜ் கதாபாத்திரத்தை விட கொடூரமானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.