ரத்தன் டாடாவின் அன்பான வளர்ப்பு நாய்.. ஏக்கத்தில் இறப்பு - தீயாய் பரவும் தகவல்?
டாடாவின் வளர்ப்பு நாய் உயிரிழந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது .
ரத்தன் டாடா
பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா(86) (09.10.2024) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் 'கோவா'அவரது முகத்தை பார்த்து,
வளர்ப்பு நாய்
நகராமல் நின்றபடி பரிதவித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதனிடையே, ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் 'கோவா' உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் தீயாய் பரவியது.
அந்த செய்தியில், ரத்தன் டாடா உயிரிழந்து 3 நாட்களுக்கு பிறகு அவரது வளர்ப்பு நாய் கோவா உயிரிழந்து விட்டது. மனிதர்களை விட நாய்கள் தங்கள் எஜமானர்களிடம் விசுவாசம் கொண்டவர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரத்தன் டாடாவின் செல்ல நாய் இறந்ததாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என மும்பை காவல் ஆய்வாளர் சுதிர் தெரிவித்துள்ளார்.