ரத்தன் டாடா பெயரில் மோசடி செய்த கும்பல்... இன்ஸ்டாகிராமில் வெளியான எச்சரிக்கை

TATA
By Petchi Avudaiappan May 17, 2022 05:48 PM GMT
Report

இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபரான பெயரில் பேஸ்புக்கில் மோசடி நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலகிலேயே மிகப்பெரிய சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் மோசடியாளர்கள், போலி நிறுவனங்கள் என மக்களை ஏமாற்றும் நிகழ்வுகள் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் ரத்தன் டாடா பெயரில் ஒரு போலி அறக்கட்டளையைப் பக்கத்தை உருவாக்கிப் பல பேரிடம் மோசடிகள் நடந்து வருவது ரத்தன் டாடாவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

'ரத்தன் டாடா பவுண்டேஷன்' எனப் பெயர் கொண்ட பேஸ்புக் பக்கம் போலியானது என்று அவரே ரிப்போர்ட் செய்ததோடு மட்டுமல்லாமல் தனது பெயரை பயன்படுத்தி மக்களிடம் பணத்தை ஏமாற்றுவதாகவும், தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களின் பெயரில் மோசடி செய்வதாகவும் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 'ரத்தன் டாடா பவுண்டேஷன்' எனப் பெயர் கொண்ட பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.