ரத்தன் டாடாவின் 10,000 கோடி சொத்து; செல்ல நாய், சமையல்காரருக்கும் பங்கு - உயிலில் இருப்பது என்ன?
ரத்தன் டாடா தனது உயில் வளர்ப்பு நாய், சமையல்காரர் குறித்தும் எழுதி உள்ளது.
ரத்தன் டாடா
பிரபல தொழிலதிபரும், டாடா அறக்கட்டளைகளின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி காலமானார்.
இவரின் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த டாடா அறக்கட்டளைகளின் தலைமை பதவிக்கு அவரது சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டார்.
10,000 கோடி சொத்து
இந்நிலையில் தற்போது ரத்தன் தாத்தாவின் உயில் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் அவரது உறவினர்கள், உதவியாளர், சமையல்காரர், செல்ல நாய் என பலரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
மும்பை அலிபாக்கில் 2,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கடற்கரை பங்களா, மும்பையின் ஜூஹு தாரா சாலையில் 2 மாடி வீடு, ரூ.350 கோடியைத் மதிப்பிலான வைப்புத்தொகை மற்றும் 165 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் 0.83% பங்கு என ரத்தன் டாடாவிற்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது.
இதில் டாடா சன்ஸில் ரத்தன் டாடா வைத்திருந்த 0.83% பங்கினை, அவர் பெயரில் இயங்கும் ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு (RTEF) மாற்றப்படும். தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான டிட்டோ-வை பராமரிக்கும் பொறுப்பை தனது சமையல்காரர் ராஜன் ஷாவுக்கு அளித்துள்ளார். டிட்டோவை வளர்ப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் டாடாவின் சொத்து மதிப்பில் இருந்து செலவு செய்யப்படும்.
சொகுசு கார்கள்
கொலாபா இல்லம் மற்றும் தாஜ் வெலிங்டன் மியூஸ் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள டாடாவின் 20-30 சொகுசு கார்கள், புனேவில் உள்ள அதன் அருங்காட்சியகத்திற்காக டாடா குழுமத்தால் வழங்கப்படலாம் அல்லது ஏலம் விடப்படலாம் எனத் தெரிகிறது.
ஹலேகாய் இல்லம் மற்றும் அலிபாக் பங்களா குறித்த தகவல்கள் உயிலில் இல்லை. தனது நீண்டகால பணியாளரான பட்லர் சுப்பையாவுக்கும் தனது உயிலில் சில ஏற்பாடுகளை செய்துள்ளார். ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடுவின் பெயரும் உயிலில் இடம்பெற்று இருக்கிறது.
நிறைவேற்றும் அதிகாரம்
மேலும், சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபோய் ஆகியோருக்கும் குறிப்பிட்ட சொத்துகளைக் கொடுத்துள்ளார்.
ரத்தன் டாடாவின் உயிலின் படி தனது விருப்பத்தின் நிறைவேற்றுபவர்களாக அவருடைய வழக்கறிஞர் தாரிஸ் கம்பதா, நீண்ட கால நண்பரான மெஹ்லி மிஸ்ட்ரி, ரத்தன் டாடாவின் சகோதரிகளான ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபாய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உயில் உடனடியாக செயல்படுத்தப்படாது என்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டே இறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.