எலி ஊர்ந்து செல்லும் பப்ஸ்; ரயில் நிலையத்தில் அதையும் விற்கும் கடைக்காரர் - வைரல் வீடியோ
ரயில் நிலையத்தில் உள்ள கடையில் பப்ஸ் மீது எலி ஊர்ந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
எலி
சமீப காலமாக ரயில்களில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி, ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் மனித விரல், விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு, கர்ப்பிணிக்கு சத்துணவில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு போன்ற அதிர்ச்சி சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
தற்போது ரயில் நிலையத்தில் உள்ள கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சிக்கன் பப்ஸ் மீது எலி ஒன்று ஊர்ந்து செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையம்
கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையம் இந்தியாவிலே பெரிய மற்றும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையம் ஆகும். இங்கு சில மாதங்களுக்கு முன் தனக்கு நடந்த கசப்பான சம்பவத்தை பயணி ஒருவர் விடியோவுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் தனது நண்பருடன் ஸ்நாக்ஸ் வாங்க ரயில் நிலையத்தில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
Saw a Rat Nesting on Chicken Puffs at the Mio Amore Counter at Howrah Station ?
byu/Aggressive_Basil923 inkolkata
அப்போது அங்க விற்பனைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிக்கன் பப்ஸின் மீது எலி ஊர்ந்து செல்வதை கண்டு அதை வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து கடை ஊழியரிடம் தெரிவித்தபோது, அவர் அதை அவர் பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை பார்க்கும் போது, இது தினமும் இப்படி நடக்கும் என்றே தோணுகிறது. என பதிவிட்டுள்ளார்.