சூப் வாங்கி கொடுத்த காதலி; ஆசையாய் பருகியதில் அலறிய காதலன் - அதிர்ச்சி சம்பவம்!

England World
By Jiyath Sep 05, 2023 01:45 PM GMT
Report

ஆர்டர் செய்த உணவில் எலி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பில் எலி

இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம் ஹெவார்டு. இவர் எமிலி என்ற பெண்ணை காதலிக்கிறார். எமிலி சீன உணவு விடுதியில் சூப் ஒன்றை ஆர்டர் செய்து, அதை வீடிற்கு கொண்டு வந்து காளான் நூடுல் சூப் எனக் கூறி காதலருக்கு கொடுத்துள்ளார்.

சூப் வாங்கி கொடுத்த காதலி; ஆசையாய் பருகியதில் அலறிய காதலன் - அதிர்ச்சி சம்பவம்! | Rat Peeked Into The Mushroom Soup I

காதலன் சாம் ஆசையாக அதை வாங்கி பருகியுள்ளார். முக்கால் பாகம் பருகிய பின்னர், சூப்பில் ஏதோ ஒன்று நகர்ந்து சென்றுள்ளது. இதனை கவனித்த சாம், முதலில் அது பெரிய காளானாக இருக்கும் என்று நினைத்துள்ளார். ஆனால் திடீரென்று ஒரு வால் மேலே வந்துள்ளது. அதனை பார்த்து மிரண்டு போயுள்ளார் சாம்.

உணவகம்

அதற்கு பின்னரே அது ஒரு எலி என்று அவருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் சாம் அதை வீடியோவாக எடுத்து, தனது காதலி ஆர்டர் செய்த உணவகத்திற்கு போன் செய்து இதுகுறித்து பேசியுள்ளார்.

ஆனால் எமிலி பணம் கொடுத்து உணவு வாங்கியதற்கான பில் இல்லாமல் போயுள்ளது. அதனால், அது தங்களுடைய உணவு இல்லை என்றும், பணத்தை திருப்பி தர முடியாது என்றும் உணவகம் தெரிவித்துள்ளது.