தமிழகத்தில் எலி பேஸ்ட் விற்க விரைவில் தடை சட்டம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை விதிக்க சட்டம் கொண்டு வரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தடை செய்ய புதிய சட்டம்
தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவ கல்லுாரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்கொலைகளை தடுப்பதற்காக எலி பேஸ்ட், சாணி பவுடர் தயாரிப்பு விற்பனையை தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசை வலியுறுத்த டெல்லி செல்லவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.