உணவுகளை ருசி பார்க்கும் எலி; தொடர் சர்ச்சையில் ரயில்வே - அதிர்ச்சி வீடியோ!
ரயில் நிலையத்தில் உணவுக்கடையில் எலி உலாவும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலாவும் எலி
ரயில்களில் பயணம் செய்பவர்கள் பலர் அங்கேயே தரப்படும் டீ, சாப்பாடு மற்றும் ஸ்நாக்ஸ்களை சாப்பிட விரும்புகின்றனர். ஆனால், இன்றளவும் ரயில்வேக்களின் உணவு தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த வன்னமே உள்ளன.
இது மட்டுமில்லாமல் ரயில் நிலையங்களில் உள்ள உணவுக்கடைகளில் எலி மற்றும் கரப்பான்பூச்சி உலாவும் வீடியோ சமுகவலைதளத்தில் அவ்வப்போது வெளியாகி சர்ச்சையை கிளப்புவது வழக்கம்.
ஷாக் வீடியோ
அந்த வகையில் தற்போது மத்தியப்பிரேதசம் இடார்சி ரயில்நிலையத்தில் உள்ள IRATC-யின் உணவுக்கடை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள உணவுகளுக்கு நடுவில் எலி ஒன்று உலாவும் வீடியோ சமுக வலைத்தளத்தில் பரவியுள்ளது. இது ரயில்வே பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
Ratatouille at IRCTC Railway food stall, Itarsi junction, Madhya Pradesh. ? pic.twitter.com/NeBLlZBYqD
— Cow Momma (@Cow__Momma) January 9, 2024
இதற்கு பொதுமக்கள் ரயில்வே உணவுகளின் தரம் குறித்து வருத்தம் தெரிவித்து கமெண்டுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.
தொடர்ந்து, இது குறித்து போபால் ரயில்வே துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.