இறந்து கிடந்த 30 எலிகளால் தங்கும் விடுதிக்கு சீல்

Death Rat Sealed Hostel
By Thahir Aug 30, 2021 09:26 AM GMT
Report

 வேலுாரில், இறந்து கிடந்த 30 எலிகளால் தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வேலுார் மாநகராட்சி 2வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில், வேலுார் 28 வார்டு காந்திரோடில் உள்ள தங்கும் விடுதிகளில் இன்று ஆய்வுப் பணிகள் மேற்கொண்டனர்.

இறந்து கிடந்த 30 எலிகளால் தங்கும் விடுதிக்கு சீல் | Rat Death Sealed To Hostel

அப்போது ஒரு தங்கும் அறையில் துர்நாற்றம் வீசியது. உள்ளே சென்று பார்த்ததில் 30 எலிகள் செத்துக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.