கொல்கத்தா அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல் - ரசிகர்கள் சோகம்
ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் விலகியுள்ளது பின்னடைவாக அமைந்துள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 25 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சில முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னும், அதன் பின்னும் காயம், சொந்த பிரச்சனை காரணமாக விலகி வருகின்றனர்.
அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாம் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார் . நடப்பு தொடரில் கொல்கத்தா அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடிய சலாம் முதுகுவலி பிரச்சனையால் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொல்கத்தா அணி நேற்றைய தினம் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.