புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம்

BJP
By Irumporai May 28, 2023 08:58 AM GMT
Report

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய நாடாளுமன்றம் 

புதுடெல்லியில் சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் | Rashtriya Janata Dal Compared The New Parliament

அதன்பின், திறப்பு விழாவுக்கான பூஜையை பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் தொடங்கி வைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து பாரம்பரிய பூஜைகள் மற்றும் அனைத்து மத குருமார்கள் வழிபாடும் நடைபெற்றது. இதன்பின், பிரதமர் மோடி ஆதீனங்கள் வழங்கிய செங்கோல் முன் மரியாதை நிமித்தமாக விழுந்து வணங்கினார்.  

சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு

இதைத்தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி செங்கோலை எடுத்து சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் நிறுவினார். தற்பொழுது, புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் கட்டமைப்பை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் படத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் பதிவிட்டுள்ள இந்த படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூறிய ஆர்ஜேடி தலைவர் சக்தி சிங் யாதவ், எங்கள் ட்வீட்டில் உள்ள சவப்பெட்டி ஜனநாயகம் புதைக்கப்பட்டிருப்பதை பிரதிபலிக்கிறது. இதை நாடு ஏற்காது. பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில், அது விவாதம் நடத்தும் இடம் என்று தெரிவித்துள்ளார்.