வெளியானது விஜய்யின் அடுத்தப்பட அறிவிப்பு... ஹீரோயினாக நடிக்கப்போவது இவர்தான்..!

rashmikamandanna thalapathyvijay actorvijay thalapathy66 ssthaman ThamanJoinsThalapathy66 RashmikaJoinsThalapathy66
By Petchi Avudaiappan Apr 05, 2022 03:38 PM GMT
Report

நடிகர் விஜய்யின் 66வது படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நடிகர் விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் 66வது படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 

ஆனால் இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளதாகவும், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தற்காலிகமாக “தளபதி 66” என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கவுள்ளார்கள் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

மேலும் விஜய்யின் 66வது படத்திற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.