நடிகை ராஷ்மிகாவை சந்திக்க 900 கி.மீ பயணித்த ரசிகர்!

Rashmika Mandanna Fan
By Thahir Jun 24, 2021 04:35 AM GMT
Report

ஊரடங்கு சமயத்திலும் நடிகை ராஷ்மிகா மந்தனாவை சந்திக்க அவரது ரசிகர் 900 கிலோ மீட்டர் பயணித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை ராஷ்மிகாவை சந்திக்க 900 கி.மீ பயணித்த ரசிகர்! | Rashmikamandanna Fan

தெலங்கானாவை சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்பவர் நடிகை ராஷ்மிகாவின் தீவிர ரசிகர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மாநிலத்தில் இருந்து ராஷ்மிகாவின் இல்லம் இருக்கும் கர்நாடகாவின் குடகு பகுதி வரை 900 கிலோ மீட்டர் பயணித்துள்ளார். வழியெங்கும் நடிகையின் வீட்டு விலாசத்தை கேட்டுக் கொண்டபடி சென்றதால், அவர் மீது சந்தேகமடைந்த சிலர் காவல்துறையிடம் புகார் அளித்துனர்.

அதன் அடிப்படையில், அந்த நபரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் குடகு பகுதியில் ஊரடங்கு அமலில் இருப்பதால், அங்கு செல்ல முடியாது எனக் கூறியுள்ளனர். மேலும், ராஷ்மிகா படப்பிடிப்புக்காக மும்பை சென்றுவிட்டார் என்ற தகவலையும் அவரிடம் கூறியுள்ளனர். இதனால் அந்த ரசிகர் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பியுள்ளார்.