No Cellphone: ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா திருமணம்
திரைப்பிரபலங்களான ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா திருமணம் வருகிற 26ம் தேதி நடக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கீத கோவிந்தம் படம் வெளியானதில் இருந்து விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா குறித்து தகவல்கள் பரவத்தொடங்கியது.
ஆனால் இருவரும் இன்றுவரையிலும் அதை ஒப்புக்கொள்ளவில்லை, இந்நிலையில் வருகிற 26ம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர்.
திரைப்பிரபலங்களுக்கு பத்திரிக்கை வழங்கப்படவில்லையாம், அதேபோல் திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு மொபைல் போன் அனுமதி கிடையாதாம்.

புகைப்பட நிபுணர்கள், புகைப்படங்களை வெளியே கசியவிடாமல் இருக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்.
தொடர்ந்து மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
திருமணம் முடிந்த கையோடு குறைந்தது ஒரு மாத காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்க இருவரும் முடிவு செய்துள்ளார்களாம்.
