ஏர்போட்டுக்கு இப்படியா வரணும் - சர்ச்சைக்குள்ளான ராஷ்மிகா மந்தானாவின் ஆடை
ஏர்போட்டிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. கவர்ச்சியாகவும் அதே சமயத்தில் கியூட்டாகவும் இருக்கும் ராஷ்மிகாவிற்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளம்.
இதனிடையே ராஷ்மிகா தற்போது ஏர்போட்டிற்கு கவர்ச்சி உடையில் வந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் ஷர்ட் அணிந்துகொண்டு மிக சிறிய அளவிலான ஷார்ட்ஸ் அணிந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பொது இடத்திற்கு இப்படியா வருவது என ராஷ்மிக்காவை வறுத்தெடுத்து வருகின்றனர்.