விஜய்யுடன் ராஷ்மிகா ரகசிய நிச்சயதார்த்தம்? தீயாய் பரவும் தகவல்!
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா திருமணம் குறித்த தகவல் பரவி வருகிறது.
விஜய்-ராஷ்மிகா
தென்னிந்தியா சினிமாவில் மிகவும் வசீகரமான ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம்.
இவர் யாரை காதலிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் இருந்து வருகிறது. எனவே, திருமண வதந்திகள் குறித்த செய்திகளும் வந்த வண்ணம் உள்ளது. தற்போது சாஹிபா என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.
நிச்சயதார்த்தம்?
இதற்கிடையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அதன்படி, இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும், ஓட்டல்களில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் படங்களும் வெளியாகி வைரலானது.
புஷ்பா 2 படம் பார்க்க விஜய்தேவரகொண்டா குடும்பத்தினருடன் ராஷ்மிகா தியேட்டருக்கு சென்ற வீடியோ அண்மையில் வெளியானது.
இந்நிலையில், ராஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாகவும், இவர்களின் திருமணம் ஆறு மாதங்களுக்கு பிறகு நடைபெற இருப்பதாகவும் தீயாய் செய்திகள் பரவி வருகிறது.