நான் இந்த அழகான குழந்தையை பார்க்க வேண்டும்... - வீடியோ வெளியிட்ட நடிகை ராஷ்மிகா

Rashmika Mandanna
By Nandhini Sep 14, 2022 08:32 AM GMT
Report

நான் இந்த அழகான குழந்தையை பார்க்க வேண்டும் என்று நடிகை ராஷ்மிகா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

புஷ்பா படம்

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம்தான் ‘புஷ்பா’.

‘புஷ்பா’ படத்தில் நடிகை ராஷ்மிகா ‘ஏ...சாமி... வாயா.. சாமி’ என்ற பாடலுக்கு நடனமாடினார். இப்பாட்டு பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இப்பாட்டு பலர் நடனமாடி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டனர்.

rashmika-mandanna-viral-video

குழந்தையை பார்க்க வேண்டும் - ராஷ்மிகா 

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுமி பள்ளியில் ‘ஏ... சாமி.. வாயா.. சாமி...’ பாட்டு ராஷ்மிகா மாதிரியே நடனமாடியுள்ளாள். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நடிகை ராஷ்மிகா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு, நான் இந்த அழகான குழந்தையை பார்க்க வேண்டும். எப்படி பார்க்க முடியும்? என்று குறிப்பிட்டுள்ளார்.