வெளிச்சத்துக்கு வந்த காதல்... - விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவுக்குச் சென்ற ராஷ்மிகா... - வைரல் வீடியோ
விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா
தெலுங்கில் முன்னணி நடிகராக விஜய் தேவரகொண்டா வலம் வருகிறார். இவர் பிரபல நடிகை ராஷ்மிகாவுடன் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் இணைந்து நடித்தனர். இப்படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்தது. இப்படம் வசூலில் சாதனை படைத்தது.
இதனையடுத்து, இவர்கள் இருவரும் மீண்டும் ‘டியர் காம்ரேட்’ படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படத்தில் இருவரும் ஜோடி போட்டு நடிக்கும் போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
ஏனென்றால், அப்படத்தில் ஒரு லிப் லாக் காட்சி அட்டகாசமாக அமைந்திருந்தது. ஆனால், இருவரும் நாங்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்கள்தான் என்றும், எங்களிடம் காதல் கிடையாது என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் தற்போது விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு ஒன்றாக சென்றுள்ளனர். இருவரும் ஜோடியாக ஒரே விமானத்தில் மாலத்தீவுக்கு சென்றிருக்கின்றனர்.
தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜோடியாக மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஏறியதால் இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.