முத்த காட்சி.. படுக்கையில் அழுதிருக்கேன் - ராஷ்மிகா வேதனை!

Only Kollywood Vijay Deverakonda Rashmika Mandanna Indian Actress
By Sumathi 2 மாதங்கள் முன்

விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த முத்த காட்சியை பலரும் கேலி செய்ததாக ராஷ்மிகா வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா 

நடிகை ராஷ்மிகா கீதா கோவிந்தம் படத்திலும் அதற்கு பின்னர் வொர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்திலும் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்திருப்பார். அடஹனித் தொடர்ந்து வெளியானது தான் டியர் காம்ரேட்.

முத்த காட்சி.. படுக்கையில் அழுதிருக்கேன் - ராஷ்மிகா வேதனை! | Rashmika Mandanna Shares Her Untold Feelings

இந்த படம் பெரிதளவில் ரீச் ஆகாவிட்டாலும் நல்ல வரவேற்பையே பெற்றது. இதுகுறித்து ராஷ்மிகா கூறுகையில், ஜய் தேவரகொண்டாவுடன் நடித்த முத்த காட்சியை பலரும் கேலி செய்தனர் என்றும் அந்த கேலி அவரை வருத்ததில் ஆழ்த்தியது.

டியர் காம்ரேட்

நான் நடித்த போல்ட் ஆன காட்சிகள் என்னை கேலியும் கிண்டலுக்கும் ஆல் ஆக்கியது. அந்த வேதனையை கடந்து வர எனக்கு பல நாட்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் கஷ்டமான விஷயங்கள் நடந்தது.

முத்த காட்சி.. படுக்கையில் அழுதிருக்கேன் - ராஷ்மிகா வேதனை! | Rashmika Mandanna Shares Her Untold Feelings

தொடர்சியாக எனக்கு பல கனவுகள் வந்தது. அதில் நான் ஒருத்தி மட்டும் இருப்பது போலவும் அனைவரும் என்னை உற்று நோக்கி என்னை மட்டும் கேலி செய்வது போல் இருக்கும். இது போன்ற கனவுகள் எதற்காக வருகிறது என்று என ஒன்றும் விளங்கவில்லை.

வேதனை

அந்த கனவில் நான் அழுவது போல் இருக்கும். சில சமயங்களில் அந்த கனவில் இருந்து விழித்த நான் என் படுக்கையில் அழுது இருக்கிறேன் என தெரிவித்தார். தற்போது, ராஷ்மிகா அமிதாப் பச்சனுடன் “குட் பை” என்ற படத்தில் நடித்துள்ளார்.

இது அக்டோபர் 7 அன்று வெளியாகவுள்ளது. தொடர்ந்து, வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.