ராஷ்மிகாவிற்கே டஃப் கொடுத்த முதியவர் டான்ஸ்... - வைரலாகும் வீடியோ
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’.
‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகா ‘ஏ...சாமி... வாயா.. சாமி’ என்ற பாடலுக்கு நடனமாடினார். இப்பாட்டு பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.
இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மேடையில் பாடகர்கள் ‘ஏ...சாமி.. வாயா... சாமி..’ என்று பாட்டு பாட, ஒரு முதியவர் ராஷ்மிகா ஸ்டைலில் நடனமாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பலர், இந்த முதியவரின் நடனத்தை பார்த்து ராஷ்மிகாவிற்கே டஃப் கொடுப்பார் போல.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ -