விஜய் படம் குறித்து தவறான பேச்சு - வருத்தம் தெரிவித்த ரஷ்மிகா மந்தனா
விஜய் படம் குறித்து தவறான தகவலை தெரிவித்ததற்கு ரஷ்மிகா மந்தனா வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரஷ்மிகா மந்தனா
சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான புஷ்பா 2 வசூலில் பெரும் சாதனையை படைத்தது.
விஜய்
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யின் படம் குறித்து இவர் தவறுதலாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் பேசிய இவர், நான் திரையரங்கில் முதலில் பார்த்த ஹீரோ விஜய்தான்.
அப்பா ரஜினி சாரின் ரசிகராக இருந்தாலும் கில்லி படம்தான் திரையரங்கில் பார்த்த முதல் படம். அப்படி போடு பாடலுக்கு பலமுறை நடனமாடி வைப் செய்துள்ளேன் என கூறினார்.
கில்லி
அத்தோடு விஜய் நடித்த கில்லி படம் மகேஷ்பாபு நடித்த போக்கிரி படத்தின் ரீமேக் என்று ஒரு தவறான தகவலை தெரிவித்தார். இவரது இந்த பேட்டி சமூகவலைத்தளங்களில் வைரலாகவே பலரும் இவரை ட்ரோல் செய்தனர்.
விஜய்யின் கில்லி திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. இது 2003 ஆம் ஆண்டு வெளியான மகேஷ் பாபுவின் ஒக்கடு படத்தின் ரீமேக் ஆகும். விஜய் நடித்த போக்கிரி படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இது 2006 ஆம் ஆண்டு மகேஷ் பாபு தெலுங்கில் நடித்து வெளியான போக்கிரி பட ரீமேக் ஆகும்.
Avunu .. telusu sorry.. okka booboo aipoindi.. 🐒 interview ayipointarvata annukunna reyyyy ghilli is okkadu ra .. pokkiri is pokiri ani.. 🤦🏻♀️ social media lo ippudu estuntaaru ani.. sorry sorry my bad.. but I love all of their movies so it’s ok. 🐒
— Rashmika Mandanna (@iamRashmika) December 21, 2024
இதனையடுத்து தவறான தகவலை தெரிவித்ததற்காக வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.