கணவன் மனைவியாக வாழும் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா : வெளியான ரகசிய புகைப்படம்
விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே வீட்டில் வசிப்பதாக வெளியான தகவலை அடுத்து ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்துள்ளார்.
காதல் விவகாரம்
விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் முதல் படத்திலிருந்தே கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. அதனைத் தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இதனையடுத்து விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலிக்கிறார்கள் எனவும், இரண்டு பேரும் ஒன்றாக மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றதாகவும் செய்திகளில் கூறப்பட்டது.
ஆனால் இருவரும் அதுகுறித்த எந்த கருத்தையும் கூறவில்லை. சூழல் இப்படி இருக்க அவர்கள் இருவருக்குமிடையேயான காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் ராஷ்மிகா தற்போது இன்னொரு நடிகரை காதலித்துவருவதாகவும் தகவல் வெளியானது
ஒரேவீட்டில் இருந்தார்களா
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் எனவும் தகவல் வெளியாகியது. அதுமட்டுமின்றி, விஜய் தேவரகொண்டாவுக்கு மிகவும் பிடித்த மோதிரத்தை ராஷ்மிகா மந்தனா அணிந்திருக்கிறார். என செய்திகள் வெளியாகின
#RashmikaMandanna & #VijayDeverakonda On Dating It's Clearly Proved... Yes but it was very Seriously ? #VijayDevarakonda Favourite Ring ? To #Rashmika Figure.. They Both are living in same house same Room.. Surely we can Hear great News ? @iamRashmika @TheDeverakonda pic.twitter.com/VotVtLUAr5
— South Digital Media (@SDM_official1) April 6, 2023
இவ்வாறான நிலையில் ராஷ்மிகா மந்தனா இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அய்யோ ரொம்ப யோசிக்காதீங்க பாபு" என பதிவிட்டுள்ளார். தற்போது அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது