"வாழ்க்கையில் எதைச் செய்தாலும்" - விஜய் தேவரக்கொண்டா குறித்து உருகிய ராஷ்மிகா..!
ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ள ராஷ்மிகா விஜய் தேவரக்கொண்டா குறித்து தெரிவித்து கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
விஜய் - ராஷ்மிகா
இந்திய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. இவரும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பல தரப்பிலிருந்து கிசு கிசுக்கள் எழுந்து வருகிறது.
கீதா கோவிந்தம் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த நடித்திருந்தார்கள். டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஹிட் ஜோடி இணைந்தது.
சில நாட்கள் முன்பு கூட இவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்றெல்லாம் தகவல் வெளிவந்து காட்டு தீ போல பரவ பின்னர் விஜய் தேவரக்கொண்டா குடும்பம் தலையிட்டு அப்படி எந்த விஷயமும் இல்லை என விளக்கமளித்தனர்.
வாழ்க்கையில்...
இந்நிலையில் தான் தற்போது ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ள ராஷ்மிகா, விஜய் தேவரக்கொண்டாவை குறித்து தெரிவித்த கருத்துக்கள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, தானும் விஜூவும் ஒன்றாகவே வளர்ந்தோம் என்று குறிப்பிட்ட ராஷ்மிகா, எனவே தான் இப்போது வாழ்க்கையில் எதைச் செய்தாலும், அதில் அவருடைய பங்களிப்பு இருக்கிறது என்று கூறினார்.