ஐபிஎல் தொடரில் சுவாரஸ்யம்... ஜாலியாக ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய வீரர்கள்...
ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள இஸ்லாமிய வீரர்கள் புனித ரமலான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் இதுவரை 48 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் தொடர் நடைபெற்று வருகிறது.
Eid Mubarak #Eid_Mubarak #mshami11 @rashidkhan_19 @RGurbaz_21 pic.twitter.com/ziFWauCyip
— Mohammad Shami (@MdShami11) May 3, 2022
இதனிடையே உலகம் முழுவதும் புனித ரமலான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் இஸ்லாமிய வீரர்கள் சக வீரர்களுடம் இப்பண்டிகையை கொண்டாடினர்.
குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள முகமது ஷமி சக வீரர்களான ரஷித் கான் மற்றும் குர்பாஸுடன் சேர்ந்து ரமலான் பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.