அஸ்வினெல்லாம் ஒரு ஆளா... வம்பிழுக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்

rohitsharma ravichandranashwin INDvSL rashidlatif
By Petchi Avudaiappan Mar 12, 2022 07:59 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ரவிச்சந்திர அஸ்வின் குறித்து ரோகித் சர்மா சொன்ன கருத்து பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரசீத் லத்தீஃப் விமர்சித்துள்ளார். 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் இன்று 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

வெறும் 3 நாட்களில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தனர். ஜடேஜா 9 விக்கெட்டுகளும், அஸ்வின் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை வெகுவாக பாராட்டிய நிலையில் முதல் போட்டிக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா அஸ்வின் மற்றும் ஜடேஜாவை பாராட்டி பேசினார். அஸ்வின் பற்றி பலரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவர்தான் சிறந்த வீரர் என ரோகித் தெரிவித்தது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

அஸ்வினெல்லாம் ஒரு ஆளா... வம்பிழுக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் | Rashid Latif On Rohit Sharma Referring Ravi Ashwin

இந்நிலையில்  முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசீத் லத்தீஃப் ரோகித் சர்மா அஸ்வின் குறித்து சொன்ன கருத்து தவறானது என தெரிவித்துள்ளார். மேலும் அஸ்வின் எடுத்த 436 விக்கெட்களில் 306 விக்கெட்கள் இந்தியாவில் எடுத்தது. மீதமுள்ள 70 விக்கெட்களை மட்டுமே வெளிநாட்டு மண்ணில் எடுத்துள்ளார்.

சொந்த மண்ணைப் பொறுத்தவரை அவரை சிறந்த வீரர் எனக் கூறி கொள்ளுங்கள். ஆனால், அனைத்து நாடுகளில் சிறப்பாக செயல்பட்டவர் எனக் கூறாதீர்கள் என லத்தீஃப் விமர்சித்துள்ளார். என்னை பொறுத்தவரை அஸ்வினை மகிழ்ச்சிப்படுத்த ரோகித் சர்மா வாய் தவறி அப்படி சொல்லியிருப்பார் என ரசீத் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.