பந்தைகூட பார்க்காமல் சிக்ஸர் விளாசிய ரஷீத் கான் - வைரலாகும் வீடியோ
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் விளாசிய சிக்ஸர் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை போன்று பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த தொடரின் ஏழாவது சீசன் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் லாகூர் குவாலாண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
சுழற்பந்து வீச்சுக்கு பெயர் போன அவர் முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிக்ஸர் விளாசி மேஜிக் நிகழ்த்தியுள்ளார். அதுவும் இந்த போட்டியில் 4 பந்துகளில் அவர் 17 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் 206 ரன்களை அந்த அணி எடுத்தது. இருப்பினும் அந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டி அசத்தியத
ஆனால் இப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் பந்தை கூட பார்க்காமல் ரஷீத் கான் அடித்த சிக்ஸர் இணையத்தில் வைரலாகியுள்ளது.