வந்துட்டேனு சொல்லு திரும்பி வந்துட்டேனு சொல்லு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் திடீர் திருப்பம்

IPL 2021 Rashid Khan Afghan cricketer
By Thahir Sep 14, 2021 02:25 AM GMT
Report

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியில் இணைந்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தகவலறிந்த வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது: "ரஷித் கான் மற்றும் முகமது நபி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளனர்.

வந்துட்டேனு சொல்லு திரும்பி வந்துட்டேனு சொல்லு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் திடீர் திருப்பம் | Rashid Khan Afghan Cricketer Ipl 2021

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வெறுமன வீரர்கள் மட்டுமல்ல, குடும்பத்தினர். தொடர் நடைபெறும்போது மட்டுமல்ல, அனைத்து நேரங்களிலும் அணி அவர்களை முழுமையாகப் பார்த்துக்கொள்ளும். அவர்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்த நல்ல மனநிலையில் இருப்பதை அணி நிர்வாகம் உறுதி செய்யும்."

முன்னதாக, டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்கும்போது தனது கருத்தைக் கேட்காமலே தன்னைக் கேப்டனாக அறிவித்ததால், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ரஷித் கான் வியாழக்கிழமை முடிவெடுத்தார்.