நெருப்புடா நெருங்குடா பாப்போம்..அதிவேகமாக 100 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த ரஷீத் கான்
டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷீத் கான் நிகழ்த்தியுள்ளார்.
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் விக்கெட்டை ரஷீத் கான் எடுத்தார்.
இது அவரது 100-வது விக்கெட் ஆகும். மேலும் இந்த விக்கெட் மூலம் அவர் ஒரு உலகச்சாதனையையும் படைத்துள்ளார்.
ரஷீத் கான் 53 டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா 76 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், ரஷீத் கான் அதை முறியடித்துள்ளார்.