என்னை கியாஸ் டேங்கர் லாரி என்று கூப்பிட்டு ஏளனம் செய்தார்கள் - மனம் திறந்த பிரபல முன்னணி நடிகை

bodyshaming rashikhanna actressopensup rashikhannaonweight indiancinemaindustry
By Swetha Subash Mar 26, 2022 10:00 AM GMT
Report

அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா.

தற்போது நடிகர் தனுஷுடன் திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார் படங்களில் நடித்து வருகிறார்.

என்னை கியாஸ் டேங்கர் லாரி என்று கூப்பிட்டு ஏளனம் செய்தார்கள் - மனம் திறந்த பிரபல முன்னணி நடிகை | Rashi Khanna Opens Up On Her Weight In The Past

இந்நிலையில் ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் தான் அனுபவித்த கஷ்டங்களை பற்றி ராஷி கண்ணா பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் நிறைய அவமானங்களை சந்தித்தேன். எனது உடல் தோற்றத்தை பார்த்து பலரும் என்னை கேலி செய்தார்கள்.

அப்போது நான் உடல் எடை கூடி குண்டாக இருப்பேன். என்னை பார்த்து சிலர் கியாஸ் டேங்கர் லாரி என்று சொல்லி ஏளனம் செய்தார்கள்.

என்னை கியாஸ் டேங்கர் லாரி என்று கூப்பிட்டு ஏளனம் செய்தார்கள் - மனம் திறந்த பிரபல முன்னணி நடிகை | Rashi Khanna Opens Up On Her Weight In The Past

சமூக வலைத்தளங்களிலும் இது போன்று என்னை கேலி செய்தார்கள். இதனால் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதன் பின்னர் கடும் உடற்பயிற்சிகள் செய்து எனது தேகத்தின் தோற்றத்தை முற்றிலும் மாற்றினேன்'' என கூறியுள்ளார்.