இந்த தடவயாச்சும் அசிங்கப்படுத்தாம இருங்க ப்ளீஸ் - ரசிகர்களிடம் கதறும் ரஷீத் கான்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் பொழுது ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது கேட்டுக்கொண்டுள்ளார். உலக கோப்பை தொடரில் 24ஆவது போட்டியான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது.
போட்டி நடைபெறுவதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். 2019 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு நாட்டு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்,இது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சைக்குரிய விஷயமாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் இது குறித்து பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது , ஆப்கானிஸ்தான் அணியின் நடத்திர சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்ததாவது, 2019 உலக கோப்பை தொடரின் போது நடைபெற்ற சம்பவம் தற்போது நடைபெறாமல் இருக்க வேண்டும், இந்த வேண்டுகோளை நான் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடத்திலும் வைக்கிறேன், விளையாட்டு என்பது இரு நாடுகளையும் ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது.
ஆனால் விளையாட்டை வைத்து சிலர் சண்டை சச்சரவில் ஈடுபடுகின்றனர் அதை தவிர்க்க வேண்டும், மேலும் இந்த போட்டியை ரசிகர்கள் அனைவரும் அமைதியாக கண்டுகளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று ரசித்தான் அதில் தெரிவித்திருந்தார்.
மேலும் பாகிஸ்தான் அணி குறித்து பேசிய ரஷீத் கான், 2018 முதல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடி வருகிறோம், அது 2018இல் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் சரி,2019 உலக கோப்பை தொடரிலும் சரி நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம்,மேலும் தற்போதைய எங்களுடைய முழு நோக்கமும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மகிழ்ச்சிகரமாக விளையாடுவது மட்டுமே என்று ரசித் கான் தெரிவித்திருந்தார்.
சமபலம் பொருந்திய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.