ரஷீத் கானுக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு... இனி அவ்வளவு தான்!

Rasheed Khan Afghanistan team
By Petchi Avudaiappan Jul 07, 2021 09:43 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார். 

டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதற்காக ரஷீத் கானை கேப்டனாக நியமிப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதேபோல் இடதுகை பேட்ஸ்மேன் நஜிபுல்லா ஸேட்ரான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

2018ல் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரஷீத் கான் அறிமுகமானார். அதன்பின் இதுவரை 51 டி20 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மேலும் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 140 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். அதேபோல 5 டெஸ்ட்களில் விளையாடி 34 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் இறுதிக் கட்டங்களில் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறன் படைத்தவர் ரஷீத் கான் என்பது குறிப்பிடத்தக்கது.