அரசியலில் மு.க.ஸ்டாலின் ஆரோக்கியமான குழந்தை - முதல்வர் எடப்பாடி கள்ளக்குழந்தை - ஆ.ராசா கடும் விமர்சனம்
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணிக்கட்சியான மதிமுக வேட்பாளர் சின்னப்பா போட்டியிட இருக்கிறார். கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டமும்,செயல் வீரர் கூட்டம் அரியலூரில் இன்று நடந்தது. இதில் திமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது- திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் போட்டி என கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அரசியல் பரிமானத்தில் ஸ்டாலின் வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து வந்தார். ஆட்சியிலும் அதிகாரத்திலும் படிப்படியாக வளர்ந்தார்.
ஆட்சியிலே முறையான வளர்ச்சி முறையான பரிமானம், கட்சியிலே முறையான பரிமானம் எனவே தான் மிக ஆரோக்கியமான குழந்தை அரசியல் குழந்தை, பெண்ணு பார்த்து நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணி. முதலிரவு நடத்தி பத்து மாதம் கடந்து பிறந்த சுகபிரசவம் அரசியலில் ஸ்டாலின் . ஆனால் எடப்பாடி பழனிசாமி திருட்டு தனமாக வந்த கள்ளக்குழந்தை.
குறைமாத குழந்தை எனவே இருவருக்கும் போட்டி என்பது நம்மாள் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை என்றார்.